சென்னை : சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் பிளஸ் 1 படித்து விட்டு, தமிழக பாட திட்டத்தில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களை, தேர்வுக்கு அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர். ஆனால், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாமல், பிளஸ் 2வுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதில்லை. பிளஸ் 1 பொதுத் தேர்வையே எழுதாதவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வகையில், மத்திய இடைநிலை கல்வி வாரிய மான சி.பி.எஸ்.இ., மற்றும் பிற மாநில பாட திட்டத்தில், பிளஸ் 1 வரை படித்து விட்டு, தமிழக பாட திட்டத்தில் பிளஸ் 2 சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்களின் விபரங்களில் பிழை இருந்தால், எமிஸ் இணையதளத்தில் திருத்தம் செய்ய வேண்டும். பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதி விட்டு, இடையில் நின்று மீண்டும் பள்ளியில் சேர்ந்து, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெயரை, நடப்பு கல்வி ஆண்டின் பிளஸ் 2 பொதுத்தேர்வு பட்டியலில் சேர்க்க இயலாது.
தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப் படுகின்றனர். ஆனால், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாமல், பிளஸ் 2வுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுவதில்லை. பிளஸ் 1 பொதுத் தேர்வையே எழுதாதவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வகையில், மத்திய இடைநிலை கல்வி வாரிய மான சி.பி.எஸ்.இ., மற்றும் பிற மாநில பாட திட்டத்தில், பிளஸ் 1 வரை படித்து விட்டு, தமிழக பாட திட்டத்தில் பிளஸ் 2 சேர்ந்த மாணவர்களுக்கு, இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., மற்றும் வேறு மாநில பாட திட்டத்தில் சேர்ந்து பிளஸ் 1 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளில் பிளஸ் 2 படித்தால், அவர்களின் பெயரை பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியலில் சேர்க்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment