'மாற்று சான்றிதழை முந்தைய பள்ளியில் இருந்து, புதிதாக சேரும் பள்ளிக்கு மாற்றிக் கொள்ளும் வகையில், நடவடிக்கை எடுக்க முடியுமா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப் பட்டன.
ஆன்லைன்
கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், ஆன்லைன் முறையில் வசதிகள் ஏற்படுத்தவும், படிப்பை பாதியில் நிறுத்தாமல் உறுதி செய்ய வேண்டும். மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து அளவில் குழுக்களை நியமிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கனிமொழி மதி ஆஜரானார். விசாரணையின் போது, ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு அரசு பள்ளியில் மாணவர் சேரும் போது, மாற்று சான்றிதழை சமர்பிக்கும்படி கோராமல், முந்தைய பள்ளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியுமா என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''அரசு பள்ளிகளில் 47 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்; அவர்களின் சான்றிதழை டிஜிட்டல் மயமாக்க ஐந்து ஆண்டுகளாகும்,'' என்றார்.
உடனே தலைமை நீதிபதி, 'மாற்று சான்றிதழ் கோருபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு, ஆன்லைன் வாயிலாக அனுப்பலாம். 'அந்த வசதி இல்லை என்றால், தாசில்தார் அலுவலகம் வாயிலாக அனுப்பலாம்' என்றார். மாணவர்கள் விடுபடாமல் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நாட்டின் எதிர்காலம் அவர்கள் என்பதால், கல்வி மிகவும் முக்கியம் என்றும் முதல் பெஞ்ச் தெரிவித்தது.
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதை தொடர்ந்து, குழந்தைகள் கல்வியில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை, மனுதாரர் தரப்பு சுட்டிக் காட்டியது. 18 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதில், குறிப்பாக கிராமப் புறங்களில் பெற்றோரிடமும், குழந்தைகளிடமும் உற்சாக குறைவு உள்ளது.
பிரச்னை
வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களால், குழந்தைகள் படித்த பள்ளியில் மாற்று சான்றிதழ் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.இந்த பிரச்னைகளுக்கான பரிந்துரைகள் தொடர்பாகவும், மாணவர்கள் கல்வி தொடர்பாக வேறு ஏதாவது பிரச்னைகள் இருந்தால் அது தொடர்பாகவும், அரசிடம் அட்வகேட் ஜெனரல் விளக்கம் பெற வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.விசாரணை, 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment