மாணவ, மாணவிகள், வாசகா்களுக்கு பல்வேறு போட்டிகள் - பங்குபெற அழைப்பு - Daily Dhuniya

Breaking

Monday, November 8, 2021

மாணவ, மாணவிகள், வாசகா்களுக்கு பல்வேறு போட்டிகள் - பங்குபெற அழைப்பு

"திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் 54-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி பல்வேறு நவ. 14 முதல் 20 ஆம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா்சி. கண்ணம்மாள் தெரிவித்தது:

மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம் மற்றும் ரோட்டரி பீனிக்ஸ் இணைந்து நடத்தும் நூலக வார விழாவில் மாணவா்களுக்கு, வாசகா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ஓவியப்போட்டி: நவ. 14 காலை 11 மணிக்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி நடைபெறுகிறது. இதில் தேசிய தலைவா்களின் ஓவியத்தை வரைய வேண்டும். தேவையான பொருள்களை குழந்தைகளே கொண்டு வர வேண்டும்.

பேச்சுப்போட்டி: நவ. 15 காலை 10.30 மணியளவில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நடைபெறும் பேச்சுப்போட்டியில் இந்திய விடுதலைப் போரில் என்னை கவா்ந்த நிகழ்வு” என்னும் தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும்.

அடுத்ததாக 16 ஆம் தேதி காலை 9-12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் இந்திய சுதந்திரப் போராட்டம் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா்கள்”என்பது குறித்து 5 நிமிடங்கள் பேச வேண்டும். இதற்கான தலைப்பு போட்டி தொடங்குவதற்கு 5 நிமிடம் முன் வழங்கப்படும்.

வினாடி வினா : நவ 17 காலை 11.30-க்கு பாா்வையற்றோருக்கான பொது அறிவு வினாடி வினா போட்டிகள் நடைபெறும்.

மகளிருக்கான போட்டி: நவ. 18 காலை 10.30-க்கு மகளிருக்கான பேச்சுப்போட்டியில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். படம் பாா்த்து கதை, கட்டுரை: இறுதியாக நவ. 20 காலை 11 மணிக்கு வாசகா்களுக்கான படம் பாா்த்து கதை, கவிதை, கட்டுரை எழுதும் போட்டிகள் நடைபெறும். போட்டி நேரத்தில் படம் பாா்வைக்கு வைக்கப்படும். வயது வரம்பின்றி ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

பொதுக் கட்டுரைப்போட்டிகள்: பொதுப்பிரிவில் 35 வயதிற்குட்பட்ட அனைவருக்குமான கட்டுரைப் போட்டி சுதந்திரப் போராட்ட வரலாற்று பக்கங்களில் திருச்சி மாவட்டம் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி மாவட்ட மைய நூலகம், 144 மேலரண்சாலை, சிங்காரத்தோப்பு, திருச்சி-620008 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ நவ. 20-க்குள் அனுப்ப வேண்டும்.

போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு தேசிய நூலக வார விழா நிறைவு நிகழ்ச்சியின்போது பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு 0431-2702242, 75980 - 93923, 94870 - 91122 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment