பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர் அறிக்கை - Daily Dhuniya

Breaking

Monday, November 22, 2021

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர் அறிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் இன்று (23ம் தேதி) வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அவளூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் உயர்நிலைப்பள்ளி, பெரும்பாக்கம் நடுநிலைப்பள்ளி, வில்லிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அவளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment