ஆசிரியர்களில் முன்னாள், இந்நாள் கிடையாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு - Daily Dhuniya

Breaking

Monday, November 15, 2021

ஆசிரியர்களில் முன்னாள், இந்நாள் கிடையாது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

கோவை மாநகராட்சி ஷாஜகான் நகரிலுள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:

ஆசிரியர்கள் மாணவர்கள் மீது காண்பிக்கும் கண்டிப்புகள் அனைத்தும், அவர்களின் நலனுக்காகவே இருக்கும். ஆசிரியர்களை முன்னாள் ஆசிரியர்கள் என்று, ஒருபோதும் நாம் அழைப்பதில்லை. ஆசிரியர்கள் எப்போதும் ஆசிரியர்களாகவே விளங்குகின்றனர்.

நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் நமக்கு போதித்த ஆசிரியரை காணும் போது, மீண்டும் மாணவர்களாக மாறிவிடுவது இயல்பு.

மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பீடு செய்வது சரியானதல்ல. ஒவ்வொரு மாணவருக்கும் தனித்திறன்கள் கட்டாயம் இருக்கும்; அதனை கண்டறிந்து மேம்படுத்துவது ஆசிரியர்களின் கடமை.

இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், எம்.பி., நடராஜன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment