*தேசிய திறனறித் தேர்வா? நீட் தேர்வின் மறு பதிப்பா? அல்லது யுனிசெப் நிதியை மையப்படுத்தியுள்ள செயல்பாடா?*
*19 மாத காலம் பள்ளிச் சூழலையே அறியாத மாணவர்களுக்கு நவம்பர் 12 ஆம் தேதி தேசிய திறனறித் தேர்வினை (National Achievement Survey--2021 ) நடத்துவதில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் பிடிவாதம் தளரவில்லையே!! ஏதுமறியாத பிஞ்சு உள்ளங்களில் நீட் தேர்வின் அறிமுகத்தினை திணித்திடும் முயற்சிதானா?*
*மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழுத்தமான பார்வையின் மூலம்தான் இந்த பாதிப்புக்கு தீர்வு காண முடியும். மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு தேசிய திறனறித் தேர்வினை கைவிடுவதற்கு முழு கவனத்துடன் செயல்பட்டு இருந்தால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறைக்கு பெருமையினை சேர்த்திருக்க முடியுமென எண்ணுகிறோம்.* *தேசிய திறனறித் தேர்வு நவம்பர் 12 ஆம் தேதி ஒன்றிய அரசின் கல்வித் துறையால் மாநிலங்கள் முழுவதும் நடத்த திட்டமிட்டு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும் எவ்வித சலனமும் இன்றி ஏற்றுக்கொண்டு நடைமுறைபடுத்தி வருவதை நம்மால் உணர முடிகிறது. தேசிய திறனறித் தேர்வு 3,5,8,10 ஆகிய வகுப்புகளுக்கு நடைபெற உள்ளது. ஒரு ஒன்றியத்தில் சுமார் 28 பள்ளிகள் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் ஏதாவது ஒரு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 3 அல்ல்து 4 பாடங்களுக்கு தேர்வினை நடத்துகிறார்கள். திறனறித் தேர்வில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் என அனைத்தும் 28 பள்ளிகளின் எண்ணிக்கையில் உள்ளன. இத்தேர்வினை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் B.Ed பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், CBSE பள்ளி ஆசிரியர்கள் நடத்துகிறார்கள்.*
*மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளி நிர்வாக பொறுப்பினை ஏற்று நடத்தும் பள்ளிகளுக்கு தேர்வு நடத்த இவர்களை அனுமதிப்பது சரியாக இருக்குமா? மேலும் தலைமையாசிரியர்களிடம் நம்பகத் தன்மை இல்லை என்பதுதான் இச்செயலின் கருத்தாக எடுத்துக்கொள்ளலாமா?*
*கொரோனா நோய் தொற்று பாதிப்பால் ஒன்று இரண்டு வகுப்புகளில் தொடர்ந்து படிக்க இயலாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு 3 ஆம் வகுப்பிற்கு நவம்பர் 1 ஆம் தேதிதான் பிள்ளைகள் பள்ளிக்கு வந்தார்கள். தொடர் மழையால் தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்மழை அதிகம் உள்ள சில மாவட்டங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவே இல்லை. இந்நிலையில் மாணவர்களுக்கு OMR தாளை கொடுத்து திறனறித் தேர்வு நடத்துவதற்கு செயல் திட்டமிடும் நோக்கம் முற்றிலும் உள்நோக்கமுடையதா? 5,8,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இதே நிலைமைதான் உள்ளது. அதிரடியாக OMR கேள்வித் தாளைக் கொடுத்து மாணவர்களை பதில் எழுதச்சொன்னால் கிராமப்புற மாணவர்கள் மன அழுத்தத்துடன் அதிர்ச்சியும் அடைவார்கள் அல்லவா? 0 கலந்தாய்வினை அறிமுகப்படுதியதுபோல் மாணவர்களின் மதிப்பெண்ணையும் அந்த நிலைமைக்கு தள்ளப்படும் பாதிப்பினை ஏற்படுத்தலாமா? மயிலை பிடித்து காலை ஒடித்து ஆட சொல்லுகிற ஒன்றிய அரசின் உள்நோக்க எண்ணம் நிறைவேற ஒருபோது அனுமதியோம்.* *பள்ளியினை அறியாத பாலகர்களிடம் நீட் தேர்வு அச்சத்தினை ஏற்படுத்த முன்வருகிறதா? கொரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகள் திறனறித் தேர்வினை நிறுத்தி வைத்ததுபோல் இந்த ஆண்டும் தேர்வினை நடத்தாமல் கைவிடுவதுதான் உளவியல்படி சரியானதாக இருக்கும்.
*மீண்டும் பிடிவாதமாக தேர்வு நடத்தி பிள்ளைகளுக்கு மதிப்பெண் தரவரிசையினை வெளியிட்டு மாணவர்களையும் பள்ளியினையும் சேதாரபடுத்த பள்ளிக் கல்வித் துறை முனைப்பு காட்ட முன்வராது என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது.*
*இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் புதியக் கல்விக் கொள்கையினை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என மக்களிடம் நம்பிக்கை அளித்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகின்ற தேசிய திறனறித் தேர்வை இந்த ஆண்டும் நிறுத்தி வைப்பதற்கு முன்னதாகவே ஒன்றிய அரசினை வலியுறுத்தி இருந்தால் இந்திய நாட்டில் உள்ள பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் முதலமைச்சராக பெருமிதம் கொண்டிருக்கலாம்.*
*தொடர் மழையினை காரணம் காட்டி தேர்வினை நிறுத்தி வைத்தால் தமிழ்நாட்டின் தனித்தன்மை நிலைநாட்டப்படும்.*
*மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும் போற்றுதலுக்குரிய தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்களும் தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனிப்பார்வைக்கு கொண்டுசென்று மாணவர்களை பாதுகாத்திட வேண்டுமாய் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.*

No comments:
Post a Comment