தேசிய திறனாய்வு தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Daily Dhuniya

Breaking

Sunday, November 7, 2021

தேசிய திறனாய்வு தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வு தேர்வு (என்டிஎஸ்இ) மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு 11, 12-ம் வகுப்புகளில் மாதம் ரூ.1,250, முதுநிலை படிக்கும்போது மாதம் ரூ,2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டுக்கான முதல்கட்ட திறனாய்வு தேர்வு ஜனவரி23-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு இன்று (நவ.8) தொடங்கி 13 வரை நடக்கிறது.

விருப்பம் உள்ளவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ரூ.50 தேர்வுக் கட்டணத்துடன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment