2 ஆண்டுகளாக பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் தலைமை ஆசிரியர் பணியிடம் 1000 அரசுப்பள்ளிகளில் காலி - Daily Dhuniya

Breaking

Sunday, November 21, 2021

2 ஆண்டுகளாக பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் தலைமை ஆசிரியர் பணியிடம் 1000 அரசுப்பள்ளிகளில் காலி

2 ஆண்டுகளாக பதவி உயர்வு, மாறுதல் கலந்தாய்வு நடத்தாததால் தலைமை ஆசிரியர் பணியிடம் 1000 அரசுப்பள்ளிகளில் காலி

பதவி உயர்வுக்கு பின் மாறுதல் கலந்தாய்வு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கலந்தாய்வு நடத்தாததால், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், கலந்தாய்வின் போது கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சமீபத்தில் ஆசிரிய பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டதால், அவர்கள் அதிகளவில் பாதிக்கப் பட்டதாக சர்ச்சை எழுந்தது. எனவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை, எந்தவித புதிய கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் இன்றி, பழைய நடைமுறைப்படியே நடத்த வேண் டும். மேலும், முதலில் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தி முடித்துவிட்டு, அதன்மூலம் ஏற்படும் காலிப்பணியிடங்களையும் சேர்த்து, ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment