நவ. 10, 11, 12ல் நடைபெறவிருந்த 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, November 9, 2021

நவ. 10, 11, 12ல் நடைபெறவிருந்த 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் தொடர் கனமழையால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

முன்னதாக, தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை எச்சரிக்கை காரணமாக நவ. 8, 9 தேதிகளில் முறையே நடைபெறவிருந்த தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மேலும் சில தினங்களுக்கு கனமழை இருப்பதால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறவிருந்த கணிதம், அறிவியல், சமூகவியல் பாடத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அறிவித்துள்ளார் .

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூடுதல் விவரங்களை தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment