'அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளும், தங்களின் செயல் திறன் அறிக்கையை, 'ஆன்லைனில்' பதிவேற்ற வேண்டியது கட்டாயம்' என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் பட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்கள், ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும் எனில், பி.எட்., படித்து தேர்ச்சி பெற வேண்டும்.பி.எட்., படிப்புகளை நடத்தும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வழியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது.மாநில அளவில், ஆசிரியர் கல்வியியல் பல்கலைகளில் இருந்து, பாடத் திட்டம் மற்றும் தேர்வு முறைக்கான இணைப்பு அந்தஸ்து, கல்லுாரிகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 650க்கும் மேற்பட்ட கல்லுாரிகள்,பி.எட்., படிப்பை நடத்துகின்றன. இந்தக் கல்லுாரிகளில் ஆண்டு தோறும் சேரும் மாணவர்கள், ஆசிரியர்களின் விபரம், கல்வி தகுதி, ஊதியம், தேர்ச்சி விகிதம் குறித்து, வருடம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என 2019ல் அறிவுறுத்தப்பட்டது.இதை எதிர்த்து, பல கல்லுாரிகள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 'ஒவ்வொரு கல்லுாரியும், கடந்த கல்வி ஆண்டுக்கான செயல் திறன் விபரங்கள் அடங்கிய அறிக்கையை ஆன்லைனில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும். ௨௦௨௨ ஜன., 29க்குள் இதைச் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment