முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்களே இருப்பதால், வயது வரம்புதளர்த்தப்படுமா என்று 40 வயதைக் கடந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக் கிறார்கள்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.
முதல்முறையாக முதுகலை ஆசிரியர் தேர்வெழுத வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டுவரப் பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 40, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிஎட் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்
இதற்கு 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் செயலரை சந்தித்து முறையிட்டனர். தமிழக முதல்வரிடமும் மனு அளித்தனர். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வயது வரம்பு நீக்கப்படுமா என்று 40 வயதைக் கடந்த பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.
பழைய நடைமுறை
இதுகுறித்து பி.எட். பட்டதாரி கள் கூறும்போது, "தமிழக முதல்வர் உத்தரவிட்டதால்போதும். உடனடி யாக பழைய அரசாணையை ரத்துசெய்துவிட்டு, புதிய ஆணை வெளியிட முடியும். இது தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குறுதி அளித்த முதல்வர், தற்போது வயது வரம்பு விவகாரத்தில், எதற்காக இவ்வளவு யோசிக்கிறார் எனத் தெரியவில்லை. பழைய நடைமுறையைப் பின்பற்றுவதால், அரசுக்கு எந்தவிதமான செலவும் ஏற்படப் போவதில்லை" என்றனர்.

No comments:
Post a Comment